Onetamil News Logo

சரித்திரம் கூறும் சங்ககாலக் காசுகள் கண்காட்சி     

Onetamil News
 

சரித்திரம் கூறும் சங்ககாலக் காசுகள் கண்காட்சி     


திருச்சி   2019 நவம்பர் 17 ; தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் சரித்திரம் கூறும் சங்க கால நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். தென்னிந்திய நாணய சேகரிப்பாளர் முகமது சுபேர் சரித்திரம் கூறும் சங்க கால நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில் பழங்கால காசுகள் நாட்டின் வரலாறு, பண்பாடு, நாகரிகம், பொருளாதாரத்தை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு காசுகளும் வரலாற்றினை அறிய உதவுகின்றது . நாணய ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் நாணயங்களை ஆராய்ந்து அதன் காலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்து வருகின்றார்கள். அக்கால காசுகளில் தேவநாகரி, கிரந்த எழுத்துக்கள், சின்னங்கள், முத்திரைகள் காணப்படுகின்றன. என்றார். தஞ்சை ஆறுமுக சீதாராமன், ரசூல், பாண்டியன், தாமோதரன், ஜெயலட்சுமி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo