Onetamil News Logo

திருச்சியில் எம்.கே.தியாகராஜ பாகவதர்  திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்

Onetamil News
 

திருச்சியில் எம்.கே.தியாகராஜ பாகவதர் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்


சென்னை 2019 ஜூலை 20 ;இன்று (20.07.2019),தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த சினிமாத் துறையின் எம்.கே.தியாகராஜ பாகவதர்  திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  அளித்த நன்றியுரை:
பேரவைத் தலைவர் அவர்களே,தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த பெரும் தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தமிழ்ச் சான்றோர்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று பல தியாகங்களைச் செய்து தங்கள் இன்னுயிரை ஈத்த தியாகச் செம்மல்கள் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர்களை போற்றும் வகையிலே  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா தமிழகத்திலே பல்வேறு மாவட்டங்களில் சிலைகளையும், மணிமண்டபங்களையும், நினைவுத் தூண்களையும் அமைத்து  அன்னார்களுடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வழிவகுத்தார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடியார்  இன்றைக்கு அம்மா அவர்களின் வழியிலே பல்வேறு தலைவர்களுக்கு நினைவு மண்டபங்களையும், சிலைகளையும், திருவுருவச் சிலைகளுக்கு  பிறந்த நாளன்று அரசு விழாவாகக் கொண்டாடி பெருமை சேர்த்து வருகிறார்கள். அந்த வகையிலே, இன்று தமிழ் சினிமா உலகம் நூறு ஆண்டைத் தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்திலே தமிழ் சினிமாத் துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் எம்.கே.டி. என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டமைக்கு என்னுடைய சார்பிலும், ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை  அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo