Onetamil News Logo

திருக்குறள் சீர் சேர்த்தல் நிகழ்ச்சி

Onetamil News
 

திருக்குறள் சீர் சேர்த்தல் நிகழ்ச்சி


திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி,  அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு  திருக் குறளினை சீர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்
 யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். 
 பள்ளி தலைமை ஆசிரியர் விமலா பேசுகையில் தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. பள்ளியில் அறத்துப்பால் பொருட்பாலில் இடம் பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை  மாணவர்களைக் கொண்டு கரும்பலகையில் எழுதும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  அவ்வகையில் திருக்குறள் சீர் சேர்த்தல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். பள்ளி மாணவர்கள் ஆர்வமாக சீர் சேர்த்த நிகழ்வுகள் பங்கேற்று உள்ளனர் என்றா
ர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo