Onetamil News Logo

பணகுடி அருகே அதிகாலையில் 134 சவரன் நகைகள் கொள்ளை ;வலை வீசி தேடும் போலீஸ் 

Onetamil News
 

பணகுடி அருகே அதிகாலையில் 134 சவரன் நகைகள் கொள்ளை ;வலை வீசி தேடும் போலீஸ் 


பணகுடி 2019 ஜூலை 15 ;திருநெல்வேலி அருகே,தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில், 134 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
 திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் பாலன் மகன் விபின் (32), இவர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆவார்.இவரது தந்தையார் பாலன் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில், அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவரது தந்தை, இரு தினங்களுக்கு முன், இளைய மகனுடன், கேரளாவில்  உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.இவரது மகன் விபின் (32),இவர் அவரது  மனைவி வீட்டிற்கு இரவு 10 மணிக்கு சென்றுள்ளார். இவருக்கு திருமணம் நடந்து 1-1/2 ஆண்டுகள் தான் நடந்துள்ளது. இந்த நிலையில்  பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று அதிகாலையில் , வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, வீட்டிற்குள் சென்றுள்ளனர். அங்கு, பீரோவை உடைத்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.நேற்று காலை வீட்டிற்கு வந்த விபின், வீடு திறந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த, 134 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. அவரது புகாரின்படி, பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து கொள்ளையர்களை பிடிக்க ஏ.எஸ்.பி ஹரிகர பிரசாத் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது காவல் உதவி ஆய்வாளர்கள் அருண் ராஜா,அண்டோ பிரதீப் ,அய்யப்பன்,ராஜாமணி,  போன்றோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கொள்ளையர்கள் CCTV  காமிரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.. இவர்கள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்கள் பணகுடி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிக்க வேண்டிய எண்: 8300022388, 9498191860, 9498192444, 9498195805. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo