Onetamil News Logo

வர்த்தகர்களை பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் ;நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வலியுறுத்தியுள்ளது.

Onetamil News
 

வர்த்தகர்களை பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் ;நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வலியுறுத்தியுள்ளது.


திருநெல்வேலி 2019 நவம்பர் 7 ;வர்த்தகர்களை பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் ;நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வலியுறுத்தியுள்ளது. 
நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாவட்ட செய்ற்குழு கூட்டம் இன்று (நவ.07) கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் எம்.நெய்னா முகம்மது (எ) மோத்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும்,  மாவட்ட துணைத் தலைவர் டவுன் பீர், இணை செயலாளர் புகாரிசேட், பாளை சிந்தா ,பர்கிட் ஜுபைர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப் அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ.கட்சி மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி கலந்து கொண்டார்,
இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்கள் விற்பனை குறைவு,  அத்தியாவசிய பொருட்களின் விற்பனை சரிவு போன்றவை சிறுகுறு வியாபாரிகள் மட்டுமின்றி, பெரிய வர்த்தகர்களும் சந்திக்கும் விளைவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இந்த சூழலில் சில்லரை விற்பனை மூலம் சிறு வியாபாரிகளை பாதித்த ஆன்லைன் வர்த்தகமானது, தற்போது மொத்த வியாபாரத்திலும் களமிறங்கியுள்ளது. இது வர்த்தகர்களை மிகப்பெரும் அளவில் பாதிக்கும். சினிமா பிரபலங்களை கொண்டு அதுபோன்ற ஆன்லைன் வர்த்தகத்திற்கு விளம்பரம் மேற்கொள்ளப்படுதன் மூலம், மக்களின் கவனத்தை ஆன்லைன் நிறுவனங்கள் பெற்று, வர்த்தகர்களின் மொத்த வியாபாரத்திற்கு பெரும் தடைக்கற்களை ஏற்படுத்துகின்றன. இதனால் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
ஆகவே, தமிழக அரசு இத்தகைய ஆன்லைன் வர்த்தகத்தை  கட்டுப்படுத்த வேண்டும். இத்தகைய விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என  செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
ஆன்லைன் நிறுவனங்களால் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் தங்களுடைய வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ளுமே தவிர,  சிறு வர்த்தகர்கள் எள்ளளவும் அதனால் பயன்பெறப் போவதில்லை. ஆகவே, பிரபலங்களும் தங்களது சமூக பொறுப்பினை உணர்ந்து, லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo