Onetamil News Logo

நெல்லை ஏர்வாடியில் இன்று நடைபெற்ற குடியுரிமை_திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம்

Onetamil News
 

நெல்லை ஏர்வாடியில் இன்று நடைபெற்ற குடியுரிமை_திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம்


நெல்லை 2020 பிப் 9 ;நெல்லை ஏர்வாடியில் இன்று காலை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது 
பள்ளியின் இமாம்கள், நிர்வாகிகள், அனைத்து இயக்க, கட்சி நிர்வாகிகள், பிரதிநிதிகள், ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இச்சட்டங்களை பற்றிய விளக்கங்களை பெற்றுச்சென்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் S. இம்ரான் அலி அவர்களின் முன்னிலையில் நெல்லை புறநகர் தொகுதி  செயலாளர் M. முஹம்மது அமீன் அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி துவங்கியது.
கருத்துரை ஆற்றிய  வழக்கறிஞர் N. முகமது ஷாஜஹான் தன்னுடைய உரையில் இக்கருப்புச் சட்டங்களானது இதற்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் எவ்வாறு எல்லாம் அமல்படுத்தப்பட்டது, அதில் அம்மக்கள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டனர் என்பதனையும், அங்கு இன்று அகதிகள் முகாம்களில் நமது நாட்டின் முதல் குடியரசு தலைவர் உடைய வாரிசுகள் முதல் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை  வீரர்களின் குடும்பங்கள் வரை அடைக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை எடுத்துக்கூறி இச்சட்டங்களை எந்த ஒரு நிலையிலும் அமுல் படுத்திட விட்டுவிடக்கூடாது என்று எச்சரித்தார்.
மேலும் NPR எனும் தேசிய மக்கள் பதிவேட்டில் உள்ள பாதகங்களையும், அப்பதிவேட்டிற்க்காக கேட்கப்படும் வினாக்களில் உள்ள ஆபத்துகளையும் பட்டியலிட்டு, அதற்கு உண்டான ஆவணங்களை எந்த ஒரு நிலையிலும் கொடுத்து விடக்கூடாது என்பதையும், மேலும் இப்பதிவேட்டிற்க்காக அரசு அலுவலர்கள் நம்மை நாடி வரும் போது அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதனையும் விளக்கிக் கூறினார்.
எவ்வாறு ஆங்கிலேயர் காலத்தில் இதுபோன்ற அடக்குமுறையாளர்களின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தி அடக்குமுறைகளை வென்றெடுத்தோமோ, அதேபோன்றதொரு ஒத்துழையாமை_இயக்கத்தை இன்று நாம் நடத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவரது உரையைத் தொடர்ந்து புதிய விடியல் துணையாசிரியர் B. ரியாஸ் அஹ்மத் அவர்களின் சிற்றுரை நடந்தது. அவர் தனது உரையில் இனிவரும் காலங்களில் நமது உரிமையை மீட்டெடுக்கும் போராட்டங்கள் யாவுமே அரசு அதிகாரம் அல்லது காவல்துறையின் அனுமதியோடு நடத்துவது என்பது இயலாத காரியம் என்பதை சுட்டிக்காட்டினார். நம்மை அடக்க அல்லது அழித்தொழிக்க நினைப்பவர்களிடமே நமது உரிமைக்கான போராட்டங்களுக்கு அனுமதியை எதிர்பார்ப்பது என்பது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் அவர்களின் கூற்றைப் போன்று "காவல்துறையின் அனுமதியோடு கச்சேரிகள் வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம் கண்டனப் போராட்டங்களை நடத்திட இயலாது" என்று கூறினார். எனவே அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டு அச்சம் கொள்ள  வேண்டியதில்லை என்பதை தெளிவான வரலாற்று  சம்பவங்களின் வாயிலாக சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களையும் வழக்கறிஞர் ஷாஜஹான் வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து ஏர்வாடி ஏரியா பிரசிடெண்ட் M. அஸ்ரப் அலி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo