Onetamil News Logo

சி.ஏ.ஏ , என்.ஆர்.சி யை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை அனைத்து கட்சியினர் அனைத்து அமைப்பினர் பங்கேற்பு 

Onetamil News
 

சி.ஏ.ஏ,என்.ஆர்.சி யை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை அனைத்து கட்சியினர் அனைத்து அமைப்பினர் பங்கேற்பு 


நெல்லை 2020 பிப்ரவரி 19 ; ஜமாஅத்துல் உலாமா தலைமையில் அணைத்து அரசியல் கட்சிகள் அணைத்து அமைப்புகள் கூட்டமைப்பு சார்பாக  சட்ட பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சென்னையில் சட்ட சபை முற்றுகையும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலக  முற்றுகை  போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டது அதன் ஒரு பகுதியாக நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் மவ்லவி ஸலாகுதீன் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி  ஆசிக் இலாஹி கிராத் ஓதி துவக்கிவைத்தார். மூத்த உலமாக்கள், அனைத்து  அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள் அணைத்து ஜமாத் நிர்வாகிகள்  முன்னிலை வகித்தனர்.  இதில் மவ்லவி ஹைதர் அலி, மவ்லவி இலியாஸ் உஸ்மானி, ஜலீல் அஹ்மது உஸ்மானி  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி, தமுமுக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன் பாப்புலர் பிரண்ட் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் திமுக தலைமை கழக பேச்சாளர் கவிஞர் மூர்த்தி, காங்ரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்,  அமமுக மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன், மதிமுக
மாவட்ட செயலாளர் நிஜாம், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முஹம்மது அலி  சி,பி,எம் பாஸ்கரன், சி.பி.ஐ காசி விசுவநாதன் மக்கள் மேடை பழனி விசிக கரிசல் சுரேஷ், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹாமிஸ் அப்துல் காதர் மீராஷா, உஸ்மான், ஷாஹுல் உஸ்மானி உள்ளிட்டோர். செய்திருந்தனர்.  இதில் குடியுரிமை சட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. சி.ஏ.ஏ என்.ஆர்.சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பேசாளர் பேட்டை முஸ்தபா, மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மது,பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாநகர ஜமாத்துல் உலாமா சபை தலைவர் மவ்லவி ஜமால் மைதீன் பாகவி நன்றியுரை கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo