Onetamil News Logo

கடமை தவறாத பெண் காவல் ஆய்வாளர்  மகேஸ்வரி-யை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,

Onetamil News
 

கடமை தவறாத பெண் காவல் ஆய்வாளர்  மகேஸ்வரி-யை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,


திருநெல்வேலி 2020 ஆகஸ்ட் 26 ;கடமை தவறாது தாய்நாடு மீது பற்று மிகுந்த பெண் காவல் ஆய்வாளரை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  மகேஸ்வரி தந்தை நாராயணசாமி  சுதந்திர தினத்திற்கு முந்திய நாள் இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் உயிரிழந்தார்.
தனது தந்தை உயிரிழந்த போதிலும் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையை தலைமை ஏற்று பணியில் ஈடுபட்டார்.
பின்பு காவல்துறை அணிவகுப்பு மரியாதை முடித்த பிறகு தந்தையின் இறுதிச் சடங்கிற்கு திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

தனது தந்தை  உயிரிழந்ததை தெரிந்தும் கடமை தவறாது தாய் நாடு மீது கொண்ட பற்றால், பணி செய்த கண்ணியமிக்க காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo