Onetamil News Logo

சென்னை-நெல்லை  - கோயம்புத்தூர்-நாகர்கோவில் மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் ;எம்.பி.ஞான திரவியம் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை 

Onetamil News
 

சென்னை-நெல்லை  - கோயம்புத்தூர்-நாகர்கோவில் மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் ;எம்.பி.ஞான திரவியம் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை 


திருநெல்வேலி  2020 செப் 6 ;திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் ,தமிழக தலைமைச் செயலாளருக்கு E-mail  மூலம் அவசரமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது கோரிக்கை மனுவில் கூறியதாவது......7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை வரும் நெல்லை அதி விரைவு ரயில் சேவை அளிக்கப்படாதது மிகவும் வேதனைக்குரியது.
கன்னியாகுமரி ரயில் கன்னியாகுமரி மாவட்டத்தின் 90 விழுக்காடு மக்கள் பயன்படுத்துவதால் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனில்லாதினால் நெல்லை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் மிகவும் அவசியம்
நெல்லை அதி விரைவு ரயிலில் இணைக்கப்படும் 24 ரயில் பெட்டிகளும் எப்பொழுதும் நிரம்பி ரயில்வே துறைக்கு லாபத்தை ஈட்டித்தருவதாகும். தற்பொழுது தென்னகத்திற்கு கன்னியாகுமரி ரயில் மட்டிலுமே இயக்க உத்திரவிட்டிருப்பதினால் 20 விழுக்காடு பயணிகள் மட்டுமே பயன்பெற முடியும்.
அதே போல் மும்பையில் நமது தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு எந்தவித வசதியும் இன்றி பரிதவிக்கிறார்கள். மேற்கூறிய ரயிலை இயக்குவதற்கு மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் அனுமதி அளிக்க மறுப்பின் அந்த ரயிலை மும்பையிலிருந்து எடுத்து Non-Stop ஆக இயக்கி முதல் நிறுத்தத்தை தமிழக்கதில் அமைக்கும்படியாக இயக்கும்படி செய்யும்படி ஆலோசனை செய்து   மும்பை-நாகர்கோவில் ரயிலையும் இயக்கிட உத்திரவிட வேண்டுகிறேன்.
மேலும் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில் நகரமாகும். தென் தமிழகத்திலிருந்து ஏராளம் மக்கள் கோயம்புத்தூருக்கு வேலைக்காக செல்லும் நிலையில் நாகர்கோவில்-கோயம்புத்தூரி ரயிலும் மிகவும் அவசியம்.
ஆகையால் தமிழக தலைமைச்செயலாளர் அவர்கள் ஏற்கனவே ரயில்களை உத்திரவிட்ட பட்டியலோடு நான் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி சென்னை-திருநெல்வேலி-1), கோயம்புத்தூர்-நாகர்கோவில்-2) மற்றும் மும்பை- நாகர்கோவில் -3) ஆகிய ரயில்களையும் சேர்த்து இயக்கும் வகையில் அனுமதி அளித்து அதனை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு தெரிவிக்கும்படி இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo