Onetamil News Logo

பாளையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக  கொரோனோ விழிப்புணர்வு பிரச்சாரம்

Onetamil News
 

பாளையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக  கொரோனோ விழிப்புணர்வு பிரச்சாரம்


நெல்லை 2020 மார்ச் வெள்ளி 20; உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களில்  இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. லட்சகணக்கான மக்கள் பாதிக்கபட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கண்டு வரும் சூழலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தேசம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் பாளை பகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி மருத்துவ சேவை அணி சார்பாக மிலிட்டரி லைன் தொழுகை பள்ளிவாசல் அருகே பகுதி தலைவர் அரசன் சேக்  தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் மற்றும் கைகழுவுதல் அவசியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மது, பர்கிட் அலாவூதீன் மருத்துவ சேவை அணி மாவட்ட செயளாலர் பர்கிட் சேக், வர்த்தகர் அணி சிட்டி சேக் பாளை பகுதி துணை தலைவர்  முஹம்மது , பர்கிட்மாநகரம் கிளை செயலாளர் பீர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo