Onetamil News Logo

கொரோனா பாதித்திருந்த இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் நெல்லையில் தற்கொலை 

Onetamil News
 

கொரோனா பாதித்திருந்த இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் நெல்லையில் தற்கொலை 


நெல்லை  2020 ஜூன் 25 ;தமிழகத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கொரோனா பாதித்திருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தக் கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் மருமகனுக்கு அண்மையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஹரிசிங்குக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கட்ந்த 23-ம் தேதி ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவரும் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ஹரிசிங்குக்கும் கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் கரோனா அச்சத்தால் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, எந்த விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல், ஒரே ஒரு குண்டு பல்புடன் இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இருட்டுக் கடை அல்வாவின் தாயகம் ராஜஸ்தான்.1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே தொடங்கியதுதான் இந்த அல்வா கடை. வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo