திருநெல்வேலியில் டி.எஸ்.பி மாரடைப்பால் மரணம் ;நாளை அடக்கம்
திருநெல்வேலி 2020 ஜூன்16 ; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தர்மலிங்கம் ( 58),போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றினார். அதன் பின்னர் திருநெல்வேலி CCIW போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்று 2 மாதங்கள் தான் கடந்துள்ளது. ஆனால் இன்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ,சங்கரன்கோவில் சாலையில் உள்ள மானுர் பிர்காவுக்கு உட்பட்ட வன்னிகோனேந்தல் ஊராட்சி மேலநீலதநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. தர்மலிங்கம் பூத உடல் வன்னிகோனேந்தல் கிராமத்தில் நாளை 17 ம் தேதி காலை 11 மணிக்கு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது.
அப்போது தர்மலிங்கத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை பாளையங்கோட்டை உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் 2-வதாக மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.