Onetamil News Logo

தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

Onetamil News
 

தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை


திருநெல்வேலி 2019 ஜூன் 13 ; திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு ஊரில் அசோக் (26) என்ற  இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை, உறவினர்கள் திருநெல்வேலி - மதுரை தேசீய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட கலைஞன் ;சாதிவெறிக்கு இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தூத்துக்குடி மாவட்டக்குழு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜாய்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                                         " தோழர்..நம்ம தமுஎகச நிகழ்ச்சிகளில் எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.." என சிரித்துக்கொண்டே ஒருமுறை கேட்டார்  அசோக். கரையிருப்பில் ஒரு தப்பாட்டக் குழுவை அப்போது தான் உருவாக்கியிருந்தான். தமுஎகச சார்பில் ஆதிச்சநல்லூரில் பிடிமண் எடுத்து வந்த போது அசோக் குழுவினரின் அதிரடியான பறையாட்டம் திசையெங்கும் எதிரொலித்தது.
நெல்லை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்களுள் ஒருவரான அசோக், இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டார்.
நேற்று இரவு 9.45 மணிக்கு டயர் கம்பெனிக்கு வேலைக்கு கிளம்பியபோது, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை இப்போதுவரை ஜீரணிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்புகூட ரத்த தானம் செய்தான்.
இவனை எப்படி வெட்ட முடிந்தது அவர்களால் ?
24 வயது கூட நிரம்பாத இந்தக் கலைஞனை வெட்டிச் சாய்த்துவிட்டார்களே...!
சாதிவெறிக்கு இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo