Onetamil News Logo

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்

Onetamil News
 

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்


திருநெல்வேலி 2020 ஜூலை 17 புதன்கிழமை ;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தியது. வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் லதா அவர்கள் தேனீ வளர்ப்பு குறித்து கலந்துரையாடினார். அவர் கூறும் போது திருநெல்வேலி  மாவட்டத்தில் ஒரு சில வட்டாரங்கள் தேனீ வளர்ப்புக்கு உகந்த கால நிலைகளை கொண்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபடாமல் இருக்கிறார்கள். குறிப்பாக அனைத்து பயிர்களிலும் பூ பூக்கும். அந்த காலகட்டங்களில் விவசாயிகள் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டால் அதிக இலாபம் கிடைக்கும். தேனீ வளர்க்கும் தோட்டங்களில் மகரந்த சேர்க்கை அதிகமாக நடை பெறுவதால் விவசாய மகசூல் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பு தொழில் அனைத்து தரப்பினரும் ஈடு படலாம், குறிப்பாக பெண்கள் முறையான பயிற்சி எடுத்து இத்தொழில் ஈடு படலாம் என கூறினார். தேனுக்கு அதிக தேவையும் அதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் சந்தை படுத்துதலில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அனைத்து விவசாயிகளும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தேன் வளர்க்கும் தொழில் நுட்பங்களை விளக்கி கூறினார். மேலும் தேனீ வளர்ப்பு தொழிலை ஊக்கப்படுத்த அரசு பல திட்டங்களை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக நடைமுறை படுத்திக்கொண்டிருக்கிறது. எனவே விவசாயிகள் அந்த துறைகளை அணுகி திட்டங்களை பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்தார். பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் வள்ளியூர், நாங்குநேரி மற்றும் களக்காடு வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo