Onetamil News Logo

பாளை அரசு மருத்துவமனை அருகே எஸ்.டி.டி.யூ ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Onetamil News
 

பாளை அரசு மருத்துவமனை அருகே எஸ்.டி.டி.யூ ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கொரோனா
விழிப்புணர்வு நிகழ்ச்சி 


நெல்லை 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை ; உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களில்  இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. லட்சகணக்கான மக்கள் பாதிக்கபட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கண்டு வரும் சூழலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தேசம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான எஸ்.டி.டி.யூ  தொழிற்சங்கம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனை ஆட்டோ ஓட்டுனர் சங்க கிளை சார்பாக   கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் மற்றும் கைகழுவுதல் அவசியம் குறித்துபொது மக்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி  கிளை துணை தலைவர் பேச்சிமுத்து தலைமையில் நடைபெற்றது.
தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் லால் முன்னிலை வகித்தார் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையாளர்  பெரிய சாமி அவர்கள் கலந்து கொண்டு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மது பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்வில் பாளை ஜிந்தா கிளை தலைவர் வில்லி ராஜன், செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் முஹம்மது கான், பொருளாளர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo