Onetamil News Logo

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுப்பது குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்

Onetamil News
 

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுப்பது குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்


திருநெல்வேலி 2020 ஜுலை 20 ;பருத்தி ஒரு முக்கிய பணப்பயிராகவும் விவசாயிகளுக்கு முக்கியமான வாழ்வாதாரமாகவும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில்  மானுர், நாங்குநேரி, பாளையம்கோட்டை மற்றும் வள்ளியூர் பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பருத்தி சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரிலையன்ஸ் அறக்கட்டளை தொலை பேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் சுகுமார் அவர்கள் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பருத்தி சாகுபடியில் நிலத்தை பண்படுத்துதல், கால சூழலுக்கு ஏற்ற இரகங்கள், விதை நேர்த்தி, களை மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடைக்கு பின் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். 
விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி வழியாக கேட்டு கலந்துரையாடினர். இதில்  முப்பத்தி ஐந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டனி எட்வர்ட் சிங் மேலாளர், ரிலையன்ஸ் அறக்கட்டளை, கள ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo