Onetamil News Logo

தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 10-க்கு நிறை கொழுப்பு ஆவின் பால் அறிமுகம் ;முகவர் உரிமம் வேண்டுவோர் 9488850561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Onetamil News
 

தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 10-க்கு நிறை கொழுப்பு ஆவின் பால் அறிமுகம் ;முகவர் உரிமம் வேண்டுவோர் 9488850561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


திருநெல்வேலி,2019 பிப்ரவரி 14 ;தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் மூலம் ரூ. 10-க்கு நிறை கொழுப்பு ஆவின் பால் இன்று  அறிமுகப்படுத்தப்பட்டது. ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் என். சின்னத்துரை புதிய வகை ஆவின் பால் மற்றும் ஹோட்டல் ஸ்பெஷல் வகை ஆவின் பால் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
 திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புதிய ரக ஆவின் பால் அறிமுக நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 10-க்கு நிறை கொழுப்பு ஆவின் பால் வகையையும், சத்து மிகுந்த அடர்த்தியான வகை ஹோட்டல் ஸ்பெஷல் ஆவின் பால் வகையையும் ஆவின் தலைவர் என். சின்னத்துரை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது.. அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர்  ஆணையின்படி, தமிழகத்தில் இரண்டாவது வெண்மை புரட்சி ஏற்படுத்தும் வகையில் ஆவின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தினமும் ஒரு லட்சம் லிட்டர் கொள்முதல் என்ற இலக்கை எட்டும் வகையில் ஏழை பெண்களுக்கு கடனுதவியுடன் கறவைமாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதல் முறையாக ஏழை எளிய மக்களின் வாங்கும் திறனை கருத்தில் கொண்டு ரூ. 10-க்கு நிறை கொழுப்பு ஆவின் பால் வகையை இன்று அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் அனைத்து நகர்புற மற்றும் கிராமப்புற மக்கள் எளிதில் பத்து ரூபாய்க்கு பாலை பெற்று பயன்பெற முடியும். இந்த பால் வகை தனியார் வகை பால் பாக்கெட்டுகளின் விலையைவிட மிகவும் குறைவானதாகும்.
இதுதவிர, ஹோட்டல் ஸ்பெஷல் என்ற சத்து மிகுந்த அடர்த்தியான ஆவின் பால் வகையையும் இன்று அறிமுகம் செய்துள்ளோம். தனியார் பால் நிறுவனங்களை விட மிகவும் குறைவான விலையில் வழங்கப்படுவதால் டீக்கடைகள், ஹோட்டல்கள் தங்கள் கடைக்கு தேவையான அடர்த்தியான ஆவின் பாலை அந்தந்த பகுதி ஆவின் முகவர்கள் மூலமாகவோ அல்லது ஆவின் நிறுவனத்தில் நேரடி முகவராகி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், ஹோட்டல்கள் மற்றும் திருமணம் போன்ற இதர விசேசங்களுக்கு தேவையான பாலை பாக்கெட்டுகள் இல்லாமல் கேன்களில் அடைத்து விநியோகம் செய்யவும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் குறைந்த விலையில் நல்ல தரமான ஆவின் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வழங்குவதற்கு வழிவகைகளை செய்து வருகிறோம்.
ஆவின் மூலம் அனைத்து வயதினரின் உடல் நிலைக்கேற்ப நல்ல தரமான, சுகாதாரமான பால் மற்றும் பால் பொருள்களை மிக குறைந்த விலையில் தயாரித்து வழங்கி வருகிறோம். ஆவின் முகவர்களின் கோரிக்கையை ஏற்று தேவையான குளிர்சாதனப் பெட்டிகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இதுதவிர, சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இனிப்பு இல்லாத பால்கோவா தேவையில் அடிப்படையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், நல்ல தரமான சுகாதாரமான ஆவின் பால் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை விற்பனை முகவர்களை நியமனம் செய்து வருகிறது. முகவர் உரிமம் வேண்டுவோர் 9488850561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நல்ல தரமான சுகாதாரமான தயிர் கப்புகளில் அடைக்கப்பட்டு 100 மில்லி ரூ. 10-க்கும், 200 மில்லி ரூ. 18-க்கும் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்படுவதால் மக்கள் ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருள்களை வாங்கி ஆதரவு தர வேண்டும் என்று ஆவின் தலைவர் என். சின்னத்துரை கேட்டுக் கொண்டார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் பொது மேலாளர், கா. ஸ்ரீரெங்கநாததுரை, உதவி பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் உள்ளீடு), உதவி பொது மேலாளர் (கணக்கு), உதவி பொது மேலாளர் (பண்ணை), உதவி பொது மேலாளர் (பொறி). உதவி பொது மேலாளர் (விற்பனை),  மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், முகவர்கள் கலந்து கொண்டார்கள்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo