Onetamil News Logo

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை விவசாயிகளுக்கு கோடைகால பராமரிப்பு குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்

Onetamil News
 

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை விவசாயிகளுக்கு கோடைகால பராமரிப்பு குறித்து  தொலைபேசி வழி கலந்துரையாடல்


திருநெல்வேலி 2020 மே 29  ;ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுடன் தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோடை காலத்தில் கால்நடைகள் பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக செலவினங்கள் ஏற்பட்டு வருவாய் இழப்பிற்கு காரணமாக அமைவது கோடைகாலமாக உள்ளது. கோடை காலத்தில் கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிரமமின்றி பராமரிப்பதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழச்சியை நடத்தியது. கால்நடை மருத்துவர் ஆபிரகாம் ஜாப்ரி, கால்நடைத்துறை உதவி இயக்குனர், அம்பாசமுத்திரம் அவர்கள் தொலைபேசி மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.  கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு வரும் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் மாடுகளுக்கு வரும் கோமாரி நோய், மடிவீக்க நோய், சினை பிடிப்பதில் வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆடுகளுக்கு வரும் நீலநாக்கு நோய் குறித்தும் அதிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது குறித்தும் தெளிவு படுத்தினார். மேலும் தீவன மேலாண்மை தாது உப்பின் அவசியம், தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் மற்றும் எந்தெந்த காலகட்டத்தில் தடுப்பூசிகள் கால்நடைகளுக்கு போட வேண்டும் என்பது குறித்தும் கூறினார். இதில் ராதாபுரம், நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளை சார்ந்த முன்னோடி கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo