Onetamil News Logo

நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

Onetamil News
 

நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்


நெல்லை 2020 பிப் 9 ;எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் எஸ் எஸ் ஏ கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட முதல் கிளை வரை உள்ள  நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்
இதில் மாவட்ட செயலாளர் முல்லை மஜீத்  வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி மற்றும் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது சிறப்புரை நிகழ்த்தினர்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்லிடை சுலைமான் அரண்மை முபாரக், மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ்  ஆலிமா ,தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் சேக் நெல்லை தொகுதி தலைவர் காசிம் பாளை தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் , ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்தி காஜா ,இராதாபுரம் தொகுதி தலைவர் பாதுல், பாளை பகுதி தலைவர் அரசன் சேக் உள்ளிட்ட வார்டு,பகுதி, கிளை நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டனர்.
இம்முகாமில் தற்போதைய அரசியல் சூழ்நிலை  எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் கட்சி வேறுபாடின்றி பங்கேற்பது நெல்லை மாவட்டத்தில் கட்சியின் முண்ணனி அமைப்புகளின் பல்வேறு சேவைகளை பாராட்டி மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரிக்கும் சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளர் பக்கீர் முஹம்மது லெப்பை, அதிகமாக இரத்ததான சேவைக்காக  கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் பேட்டை ஜெயலானி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து கவுரவிக்கபட்டனர்
தீர்மானங்கள் ;
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகளில் போட்டியிடுவது சம்பந்தமாகவும் வாக்காளர் பட்டியல் உள்ள குறைகளை சரி செய்திடவும் வேட்பாளர்களை தேர்வு செய்வது வாக்காளர்களை சந்திப்பு  பல்வேறு பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டது
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சியின் மகளிர் அணி சார்பாக மாவட்ட அளவிலான பேரணி மற்றும் மாநாடு பிப்ரவரி 23 ல் நடத்துவது
மீண்டும் தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் சாலை திரியும் மாடுகளை தடுக்க  மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
மழை காலம் முடிந்தும்  சேதமான நெல்லையின் பிரதான சாலைகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நிகழ்சியின் நிறைவில் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுத்தீன் நன்றி கூறினார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo