Onetamil News Logo

தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த திருநெல்வேலி அன்னபூர்ணா ஓட்டலுக்கு ₹15,044 அபராதம்!   

Onetamil News
 

தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த திருநெல்வேலி அன்னபூர்ணா ஓட்டலுக்கு ₹15,044 அபராதம்!   


திருநெல்வேலி  2019 ஜூலை 13 ;திருநெல்வேலியில்  தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகத்திற்கு நெல்லை நீதிமன்றம் ₹15,044 ரூபாய் அபராதம் விதித்தது. 
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் அருகே உள்ள பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள அன்னப்பூர்ணா ஹோட்டலில் 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார்.இதற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக 2 ரூபாய், பார்சல் செய்ய 2 ரூபாய் என 4 ரூபாய் சேர்த்து 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.   
தயிர், பச்சை பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயிருக்கு ஜிஎஸ்டி வரி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜா நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் ,தயிர் வாங்கிய 44  ரூபாய் மொத்தம்  ₹15,044 ரூபாய் வழங்கவேண்டும்.இவற்றை  மகாராஜாவுக்கு ஒரு மாதத்தில் தர வேண்டும் வழங்காதத் தவறினால் 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என்று  நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo