Onetamil News Logo

சாலைகளில் திரியும் மாடுகளால் 2 பேர் பலி ;கலெக்டர் நடவடிக்கை எடுக்க SDPI கோரிக்கை

Onetamil News
 

சாலைகளில் திரியும் மாடுகளால் 2 பேர் பலி ;கலெக்டர் நடவடிக்கை எடுக்க SDPI கோரிக்கை 


திருநெல்வேலி 2019 டிசம்பர் 1 ;சாலைகளில் திரியும் மாடுகளால் உயிர்இழப்புகள்  தடுக்ககோரி மாவட்ட ஆட்சியருக்கு SDPI  கோரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் மாநகராட்சி பகுதி மற்றும் கிராமபுற சாலைகளில் கேட்பாரற்று சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் அதிகஅளவு  விபத்து தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  நேற்றைய தினம் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில்  மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு கபீர்(27) இளைஞன்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேபோல் சேரன்மகாதேவியை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவர் காருகுறிச்சி அருகே சாலையில் நின்ற மாட்டின் மீது மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே   உயிரிழந்துள்ளார். ஆங்காங்கே மாடுகளால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு காயங்களும் ஏற்படுகிறது எனவே தக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo