Onetamil News Logo

நெல்லை கண்ணன் கைதை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

நெல்லை கண்ணன் கைதை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்


                                                                                          
நெல்லை  2019 டிசம்பர் 2 ;எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசியதர்க்காக அவர் மீது வழக்கு பதியபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இதை கண்டித்தும் நெல்லை கண்ணன் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் மாவட்ட பொது செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது இதில் பாப்புலர் பிரண்ட் மாநில செயலாளர் முஹைதீன் எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அஹ்மது நவவி கண்டன உரையாற்றினார்.  அவர் கூறியதாவது. மத்திய பாஜக அரசின் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்ட
நடவடிக்கைக்களுக்கு எதிராக, கடந்த டிச.29, 2019 அன்று, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக  தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில்,  நெல்லை கண்ணன் அவர்கள் வன்முறையை தூண்டிவிட்டதாக பாஜகவினர் திட்டமிட்டு செய்திகளை பரப்பி, அவர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது.
தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையானது மக்கள் விரோத பாஜக அரசின் செயல்பாடுகளை தேசப்பற்றோடு சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருந்தது. அவரின் உரை பாஜக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளின் மீதான கோபமும், விரக்தியும், அறச்சீற்றமுமாகவே இருந்ததே தவிர, எள்ளளவும் அதில் உள்நோக்கம் என்பது கிடையாது.
ஆனால், வன்முறையை தூண்டும் கொலைவெறிப் பேச்சுக்களை பேசுவதையே வழக்கமாக கொண்ட பாஜக உள்ளிட்ட இத்துத்துவா அமைப்புக்கள், ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் உரையை தேச விரோதமாக சித்தரித்து அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீதானா வழக்குகளை திரும்ப பெற்று விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்
இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் சி.பி.எம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஷாஹுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் ஹயாத்முஹம்மது, பேட்டை முஸ்தபா முல்லை மஜித் பர்கிட் அலாவுதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆரிப் சுல்தான், பாளை தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ், செயலாளர் புகாரி சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo