Onetamil News Logo

2 மாத சம்பளத்தை முன் பணமாக பீடி கம்பெனி முதலாளிகள் தொழிலாளிகளுக்கு கொடுக்க அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு 

Onetamil News
 

2 மாத சம்பளத்தை முன் பணமாக பீடி கம்பெனி முதலாளிகள் தொழிலாளிகளுக்கு கொடுக்க அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு     


நெல்லை 2020 மார்ச் 29 ; SDTU பீடி தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக 29ம் தேதி இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கொரோனா வைரஸ் பரவல் தடை காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பீடி சுற்றும் பெண் தொழிலாளர்கள் பீடி பேக்கிங் செய்யும் ஆண் தொழிலாளர்கள் மற்றும் பீடி தொழில் சம்பந்தமான அனைத்து வேலைகள் செய்யக்கூடிய அனைத்து நபர்களுக்கும்  அவர்களின் வாழ்வார செலவினங்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக பீடி கம்பெனி முதலாளிகள் தொழிலாளிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று SDTU பீடிதொழிலாளர் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
இந்த ஆலோசனை கூட்டத்தில் SDTU மாநிலச் செயலாளர் சாந்து இப்ராஹிம் . SDPI மாவட்ட தலைவர் SSA கனி. SDTU மாவட்ட செயலாளர் பசீர் லால் மற்றும் . மாவட்ட துணைத்தலைவர் கல்வத்.,மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன்.,பீடி தொழிலாளர் நலச் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுல்தான் பாதுஷா  கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo