Onetamil News Logo

வரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி

Onetamil News
 

வரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி


நெல்லை 2019 மே 16: நெல்லை மாவட்டம் வரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி- 4 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வரகனூரில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான குணா என்ற பட்டாசு ஆலை உள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆலையை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது. பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலை அருகே நெல்லை மாவட்டம் கரிவந்தநல்லூர் அருகே உள்ள மாங்குடி பகுதியை சேர்ந்த 8 பேர் அப்பகுதியில் விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களில் சிலர் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பட்டாசு ஆலை அறைக்குள் பரவியதாக கூறப்படுகிறது ஏற்கனவே அந்த அறைக்குள் கழிவாக கிடந்த பட்டாசுகள், தீ பரவியது மளமளவென வெடித்து சிதறியதில் சமையல் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பட்டு மாங்குடியை சேர்ந்த கோபால் (61) , கனகராஜ் (46), அர்சுனன் (17) குருசாமி (62) காமராஜ் (62) ஆகிய5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வெம்பகோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தகவலறிந்த திருவேங்கடம் காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த தொழிலாளர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கோபால், குருசாமி அர்ச்சுனன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காமராஜ், கனகராஜ் ஆகியோர் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற வந்த கோபால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo