Onetamil News Logo

மேலப்பாளையம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினர்.

Onetamil News
 

எஸ்டிபிஐ கட்சி , இர்ஃபானுல் ஹூதா டிரஸ்ட், மேலப்பாளையம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினர்.


 நெல்லை 2020 மார்ச் 30 ;எஸ்டிபிஐ கட்சி , இர்ஃபானுல் ஹூதா டிரஸ்ட், மேலப்பாளையம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினர்.
உலக அளவில்அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் பரவலால்  நாடே முடங்கியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் கொரானாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினக்கூலிகள், அடித்தட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவிகரம் நீட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு சமூக நல பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும்  இர்ஃபானுல் ஹூதா டிரஸ்ட், மேலப்பாளையம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து  ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்த மேலப்பாளையம் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளர்கள் இருநூறுக்கும்  மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் 21 வகைமளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி  தலைமையில் இர்ஃபானுல் ஹூதா டிரஸ்ட், மேலப்பாளையம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் நிர்வாகிகள் ம்.எஸ்.ஜெயினுல்ஆபிதீன், எஸ்.கே.பீர்,கே.கே.ஆசிக்,  மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வழங்கினர், உடன் ஜவுளிகாதர், அய்யூப்,காஜா, ஜாபர் ஆலிம், சுல்தான் பாஷா இருந்தனர் அதே போல் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நெல்லை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான முக கவசங்களும், பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo