Onetamil News Logo

தேசிய தன்னார்வ தினத்தன்று  சிறந்த சமூக சேவைக்கான விருதை இரத்ததான சேவை செய்யும் அனைத்து அமைப்பாளர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு ;கலெக்டர் சில்பா பிரபாகர் பங்கேற்பு 

Onetamil News
 

தேசிய தன்னார்வ தினத்தன்று  சிறந்த சமூக சேவைக்கான விருதை இரத்ததான சேவை செய்யும் அனைத்து அமைப்பாளர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு ;கலெக்டர் சில்பா பிரபாகர் பங்கேற்பு 


திருநெல்வேலி 2018 நவம்பர் 10 ;தேசிய தன்னார்வ தினத்தை மையபடுத்தி சிறந்த சமூக சேவைக்கான விருதை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சில்பா பிரபாகர் இரத்ததான சேவை செய்யும் அனைத்து அமைப்பாளர்களையும் பாராட்டினார்.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் , நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய சமூக சேவை சார்ந்த அமைப்புகளுக்கும்,  இரத்ததான சேவையில் சிறப்புடன் செயல்படக் கூடிய இரத்ததான அமைப்புகளுக்கும் சிறந்த சமூக சேவைக்கான சிறப்பு விருதினை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி கொளரவித்தார்கள்.
இவ்விழாவில்  மக்கள் கல்வி தொண்டு இரத்ததான அறக்கட்டளை சார்பாக கல்யாண் குழு ,
அன்னைதெரசா இரத்ததான அறக்கட்டளை சார்பாக வைகுண்ட மணி குழு,
NFS அறக்கட்டளை சார்பாக  கோபி மற்றும் அருண் குழு ,கலாமின் கனவுகள் சார்பாக சுமு முருகன் குழு, காமராஜர் இரத்ததானகழகம் சார்பாக கண்ணன் குழும் ,ஆதரவுகரங்கள் சார்பாக பழனி கண்ணா மற்றும் சந்தோஷ் குழும் ,நேதாஜி இரத்ததான கழகம் சார்பாக ராஜா குழு, சாரல் இரத்ததான கழகம் சார்பாக அன்சாரி குழு ஆகிய குழுக்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் முடிவில் இரத்ததான அமைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்தன...
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கல்வி,தொண்டு மற்றும் இரத்ததான கூட்டமைப்பு ,அன்பு மனிதம் ஒருங்கிணைப்பாளர் அ.சேக் முகமது 24*7 *இரத்ததான சேவை தமிழகமெங்கும் தொடர்புக்கு*
9600332820 , 8144005595 ;மனிதம் வளர்ப்போம்.! உயிர் காப்போம்.!! ஒற்றுமையே வலிமை..!!!*
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ;*HELP LINE BLOOD BANK & COMPONENT CENTRE* 9677720777 , 04614200888...
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo