Onetamil News Logo

என்.ஆர்.சி. சி.ஏ.ஏ  சட்டங்களை கண்டித்து  சேரன்மகாதேவி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

Onetamil News
 

என்.ஆர்.சி. சி.ஏ.ஏ  சட்டங்களை கண்டித்து  சேரன்மகாதேவி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்


சேரன்மகாதேவி 2020 ஜனவரி 22 ; மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தசட்டம்  ஈழ தழிழர்களையும் முஸ்லீம்களையும் புறக்கணிக்கும் விதமாக அமைத்துள்ளது.அதே போல் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டமும் முஸ்லிம்கள் குடியுரிமையை கேள்வி குறியாக்கியுள்ளதாகவும் கூறி நாடு முழுவதும்  போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக    நெல்லை சேரன்மகாதேவியில் ஊர்பொதுமக்கள் அனைத்து ஜமாத் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சேரன்மகாதேவி ஜமாத் தலைவர் ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகிகள் அமைப்பு கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இமாம் குலாம் மைதீன் கிராத்ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.  மீரான் கனி காசிஃபி வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொது செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்   இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது  செயலாளர்  அப்துல் ஹமீத், மமக மாநில பொது செயலாளர் அப்துல் சமத் மனித நேய மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பாளை ரபீக் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அய்யாவழி பாலமுருகன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா. சி.பி.எம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில்  சேரன்மகாதேவி ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி, ,  மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன். பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முஹம்மது அலி தமுமுக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில இளம் சிறுத்தைகள் பாசறை செயலாளர் எம்.சி. கார்த்திக் ஏகத்துவ மாவட்ட தலைவர் இப்ராஹிம்,  நாம் தமிழர் அம்பை தொகுதி செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக சேரன்மகாதேவி  ஜமாத் துணை தலைவர் முஹம்மது அலி நன்றியுரை கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo