Onetamil News Logo

வீரவநல்லூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு  பொதுமக்கள் அனைத்து கட்சிகள் சார்பாக முற்றுகையிட்டு போராட்டம்   

Onetamil News
 

வீரவநல்லூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு  பொதுமக்கள் அனைத்து கட்சிகள் சார்பாக முற்றுகையிட்டு போராட்டம்     


வீரவநல்லூர் 2020 ஜனவரி 24 ; வீரவநல்லூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு  பொதுமக்கள் அனைத்து கட்சிகள் சார்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
வீரவநல்லூரில் கிளாக்குளம் பகுதியில் வழிபாட்டு தளங்களுக்கு அருகில்  டாஸ்மாக் கடை இன்று திறக்க பட இருந்த நிலையில். பொது மக்களுக்கு இடையூறாகவும். வழிபாட்டு தளங்களுக்கு அருகில் மதுபான கடை அமைவதாகவும் கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையில் ஊர்பொதுமக்கள் அனைத்து கட்சியினர்.
ஜமாத்தார்கள் பொதுமக்கள் என திரண்டு கடையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்திர் தகவலறிந்த வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் ஷேம்சன் ஆர்ப்பாட்ட காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார்.  தாசில்தார் சரவணன் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடக்கும் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்ட காரர்களிடம் விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்த பின்னரே டாஸ்மாக் கடை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் கலைந்து சென்றனர். திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.இதில் வீரவநல்லூர் திமுக பேரூர் கழக செயலாளர் திரு திரு எம்.அப்துல் ரஹ்மான்பேரூர் பொருளாளர் திரு நவநீதன்  மாவட்ட மருத்துவ  அணி துணை அமைப்பாளர் திரு முத்துராமலிங்கம் மாவட்ட பிரதிநிதி சுப்பையா எஸ்.டி.பி.ஐ கட்சி அம்பை தொகுதி செயலாளர் அஜீஸ், ஜாஹிர்உசேன், வீரைநகர செயலாளர் சுல்தான் கிளை நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo