புற நோயாளிகளின் பதிவு சீட்டை விரைவாக வழங்கிட SDPI கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பாக நேரில் சென்று கோரிக்கை
திருநெல்வேலி 2019 நவம்பர் 7 ;மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பதிவு சீட்டை விரைவாக வழங்கிட SDPI கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பாக நேரில் சென்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் பதிவுச் சீட்டு வழங்குவதில் தாமதபடுத்தப்படுவதாக SDPI கட்சியின் மருத்துவ சேவை அணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து
இன்று காலை மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு SDPI கட்சியின் மருத்துவ சேவை அணி பொருளாளர் முபாரக் அலி. அவர்கள் தலைமையில் சென்ற SDPI கட்சியின் நிர்வாகிகள் மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் Dr.ராமநாதன் MBBS அவர்களிடம் புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு சீட்டை தாமதமின்றி விரைந்து வழங்கி பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று SDPI கட்சியின் மருத்துவசேவை அணியின் சார்பாக நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பாளை சட்டமன்ற தொகுதி தலைவர் மின்த்துல்லா , தொகுதி செயலாளர் புஹாரி மற்றும் SDTU நிர்வாகி சிந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.