Onetamil News Logo

மாசு படும் தாமிரபரணி தண்ணீர் ; நெல்லை நாரணமாள்புரம்  ஊரில் பாலத்துக்கு கீழ் பகுதியில் ஏராளமான பொது மக்கள் தினமும் தாமிரபரணி நதியில் குளிக்கிறார்கள் ;வாகனங்களையும் கழுவி வரும் அவலம் 

Onetamil News
 

மாசு படும் தாமிரபரணி தண்ணீர் ; நெல்லை நாரணமாள்புரம்  ஊரில் பாலத்துக்கு கீழ் பகுதியில் ஏராளமான பொது மக்கள் தினமும் தாமிரபரணி நதியில் குளிக்கிறார்கள் ;வாகனங்களையும் கழுவி வரும் அவலம் 


நெல்லை 2018 ஜனவரி 10 ;நெல்லை நாரணமாள்புரம் என்ற ஊரில் பாலத்துக்கு கீழ் பகுதியில் ஏராளமான பொது மக்கள் தினமும் தாமிரபரணி நதியில் குளித்து வருகிறார்கள்.  குளிக்க வரும் நபர்கள் துணி, செருப்பு, குப்பைகள் போன்றவற்றை தண்ணீரில் போட்டு விட்டு செல்லுகிறார்கள்..மேலும் ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்களையும் கழுவி வருகிறார்கள்..  இவ்வாறு செய்வதன் மூலம்  தண்ணீர் மிகவும் மாசு படுகிறது... 
மிகவும் பெருமைவாய்ந்த நமது தாமிரபரணி நதி  இப்படி அசுத்தமடைவது மனதுக்கு மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.  அதனால் நெல்லை மாநகராட்சி சார்பில் இந்த பகுதியில் தண்ணீரில் குப்பை, துணி போடா கூடாது என்றும்.. வாகனங்களையும் கழுவ கூடாது என்றும் ஒரு எச்சரிக்கை பலகை வைத்து ...மேலும் மக்கள் குப்பைகளை கொட்ட குப்பைத்தொட்டிகள் வைத்து நெல்லை மக்களின் உயிரான தாமிரபரணி நதியை காப்பாற்ற வேண்டும் 
நெல்லை நாரணமாள்புரம் பகுதியில் மட்டுமில்லாமல் நெல்லை முழுவதும் பெரும்பாலான மக்கள் நதியில் குளிக்கும் பகுதியில் இதுபோன்ற எச்சரிக்கை பலகை வைத்து அபராதம் விதிக்கவேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo