Onetamil News Logo

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் சார்பாக வள்ளியூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

Onetamil News
 

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வள்ளியூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம்


வள்ளியூர் 2019 அக்டோபர் 22 ; திருநேல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் வட்டாரம் தனக்கர்குளம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சிவசுப்பிரமணிபுரம் கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் சார்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர்  கணபதி , கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் வள்ளியூர் வட்டார அட்மா தொழில் நுட்ப மேலாளர் பிரதீப் தேவதாஸ் , சிவசுப்பிரமணிபுரம் கூட்டுறவு பண்ணைய தலைவர் பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், கழிச்சலுக்கான சிகிச்சைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் தரப்பட்டன.
மாடுகள் 18,  பசுங்கன்றுகள் 23,  வெள்ளாடுகள் 288,நாய் 3 என 332 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் அண்டோனி எட்வர்ட் சிங்கள ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன் , வேளாண்மை துறை மற்றும் கூட்டுறவு பண்ணைய நிர்வாகிகள்  ஏற்பாடு செய்திருந்தனர். இக்கால்நடை மருத்தவ முகாம் பயனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo