Onetamil News Logo

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - SDPI கட்சி வலியுறுத்தல்.!

Onetamil News
 

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - SDPI கட்சி வலியுறுத்தல்.!


தூத்துக்குடி 2019 அக்டோபர் 30 ;அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - SDPI கட்சி வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வால் பறிக்கப்பட்ட, மருத்துவ உயர்கல்விப் படிப்புகளில் அரசுப் பணியில் உள்ளோருக்கென இருந்த இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மேலும், காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதொப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களை  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து, நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி,  “மருத்துவர்களின் போராட்டக் கோரிக்கைகள் நியாயமான ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்றே ஒருநாள் அடையாள போராட்டம் மூலமாக கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்திய நிலையில், இரண்டு மாதமாதியும் அரசு அந்த கோரிக்கைகள் குறித்து போதிய நடவடிக்கை எடுக்காத வேளையில் தான், தற்போது மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வேகமாக பரவிவரும் சூழலிலும், மருத்துவர்கள் போராட்டம் காரணமாக மக்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் பெரும் இடர்பாடு ஏற்படும் என்பதால், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வை ஏற்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo