Onetamil News Logo

நெல்லையில் குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்தில் பணிசெய்த தூய்மைப் பணியாளரின் 'கை' துண்டான பரிதாபம் 

Onetamil News
 

நெல்லையில் குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்தில் பணிசெய்த தூய்மைப் பணியாளரின் 'கை' துண்டான பரிதாபம் 


நெல்லை 2020 ஜூலை 29 ; நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளரின் 'கை' துண்டானதற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்து கைது செய்யப்பட வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
 நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில்  தூய்மை பணியாளராக பணி செய்யும் பாக்கியலெட்சுமி என்பவர் நேற்றைய தினம் 28-7-2020 அன்று  மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது அந்த இயந்திரத்தில் பாக்கியலெட்சுமி அவர்களின் 'கை' சிக்கியதில் கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் மயங்கிய செய்தி எம்மைப் போன்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இச்சம்பவம் ஏதோ கடந்து போகக் கூடிய செய்தியாக எண்ணிப் பார்த்து விடக் கூடாது.
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் மரணமும் அவர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்ற சம்பவங்கள் முழுக்க முழுக்க சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும் முறையான கருவிகளை வழங்காமல் கூடுதல்  பணிச் சுமையை திணிப்பதால் ஏற்படக்கூடிய இழப்பாக கருதவேண்டும்.
இன்றைய கொரானா பேரிடர் காலத்தில் தூய்மைப்பணியாளர்களின் களப்பணி என்பது எல்லைப் பாதுகாப்பு வீரர்களை விட ஆபத்து மிக்கது மக்களை காக்கின்ற மிகப் பெரிய சேவையாகும் அப்படிப்பட்டவர்களை எவ்வித முன்  பயிற்சிகளையும் மேற்கொள்ளாமல் நவீன எந்திரங்களை தூய்மைப்பணியாளர்களை கொண்டு கையாள வைப்பது என்பது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் மாநகராட்சியின் அதிகாரிகளின் இச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதே  போல் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் இராமையன்பட்டி பகுதியில் குடியிருக்கும் பார்வதி என்கிற தூய்மைப் பணியாளர் அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்லும் போது நான்கு சக்கர வாகனம் வேகமாக வந்து இடித்ததில்
அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு கால்களும் எடுக்க பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.காவல் சித்ரவதை மரணங்களுக்கும் துன்புறுத்தலுக்கும் காவல் துறை சார்பில் தாமாக முன்வந்து பொய் அறிக்கையை விடும் எடப்பாடி தூய்மைப் பணியாளர்கள் பணியின் போது நேரிடும் மரணங்களுக்கும்,உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்களில் அதிகாரிகளை காப்பதற்க்காகவும் பட்டியல் சாதி தானே என்கிற அலட்சியத்தாலும் மௌனியாகி விடுகிறார் முதல்வர் எடப்பாடி.நெல்லை தூய்மைப் பணியாளர் பாக்கியலெட்சுமி அவர்கள் பணியின் போது கை துண்டானதற்கு இந்த எடப்பாடி அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
மருத்துவமனை முதன்மை (டீன்)  மருத்துவர் தலைமையில்  பாக்கிய லெட்சுமி அவர்களின் உயர்  மருத்துவ சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிப்பதோடு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். 
முறையான பயிற்சி வழங்காமல் தூய்மை பணியாளர்களை எந்திரம் கையாளுவதற்கு அலட்சிய போக்கோடு அனுப்பிய மாநகராட்சி அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதோடு கைது செய்யப்பட வேண்டும்.
அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் 50 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டில் இணைப்பதோடு..
ஒரு கை யை இழந்து நூலிழையில் உயிர் தப்பிய பாக்கிய லெட்சுமி அவர்களுக்கு இழப்பீடாக 25 லட்சம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo