திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு தேசியக்கொடி இரவில் 9 மணிக்கும் பட்டொளி வீசி பறக்கிறது ; கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம் சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே தேசியக் கொடியைப் பறக்கவிடவேண்டும்.
திருநெல்வேலி 2021 பிப்ரவரி 22 ; திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு தேசியக்கொடி இரவில் 9 மணிக்கும் பட்டொளி வீசி பறக்கிறது ; கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம் சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே தேசியக் கொடியைப் பறக்கவிடவேண்டும்.ஆனால் மத்திய அரசுக்கு கீழ் செயல்படும் திருநெல்வேலி ரயில் நிலைய நிர்வாகிகள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்திய தேசிய கொடியை பயன்படுத்துவது எப்படி ; 1.சுதந்திர தினம், குடியரசு தினம் நீங்கலாகப் பிற நாட்களில் தேசியக் கொடியை ஆடையில் குத்திக் கொள்ளக் கூடாது.
2. தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் கயிற்றில் கட்டும்பொழுது தரையில் படாமல் கவனமாகக் கட்ட வேண்டும். மேலும் நீர் நிலைகள், சேறு படிந்த இடங்கள் போன்றவற்றில் படாமல் பார்த்த்க் கொள்ள வேண்டும்.
3. தேசியக் கொடியைத் தலைகீழாகப் பிடித்தம் அல்லது தலைகீழாகக் கட்டுதல் போன்றவை தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும்.
4. எந்த விதமான எழுத்துக்களையோ, வடிவங்களையோ, மதச்சின்னங்களையோ தேசியக் கொடியின் மீது அச்சடிக்கக்கூடாது!
5 சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே தேசியக் கொடியைப் பறக்கவிடவேண்டும்.
6. தேசியக் கொடியின் வடிவத்தைத் திரைச் சீலைகள், கைக்குட்டைகள், தலையணை உறைகள் போன்றவற்றில் அச்சிடக் கூடாது!
7. இடுப்புக்குக் கீழே எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை அணியக்கூடாது!
8. கையில் ஏந்திச் செல்லும்பொழுது தேசியக் கொடியை வலது புறமாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்!
9. இந்திய ஆட்சியாளர்கள் தவிர தனியார் வாகனங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது!
10. அயல் நாட்டு அதிபர்கள், தூதர்கள் போன்றோர் இந்தியாவிற்கு வருகை புரிந்தால் அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தின் வலது புறம் நம் நாட்டுக் கொடியும், இடது புறம் அவர்கள் நாட்டுக் கொடியும் இருக்கும்.
11. சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெறும் சமயத்தில் எல்லா நாட்டுக் கொடிகளையும் பறக்கவிட சர்வதேசச் சட்டம் ஒன்று உள்ளது. அதன்படி எல்லா நாட்டுக் கொடிகளையும் ஒரே அளவுள்ள கொடிக்கம்பத்தில் ஒரே அளவில் பறக்க விடவேண்டும்.
12. இந்தியாவில் இத்தகைய சர்வதேச மாநாடுகள் நடைபெற்றால், முதல் கொடி இந்தியக் கொடியாகவும், அதன் பின்னால், பங்குபெறும் நாடுகளின் கொடிகள் அகர வரிசை முறையிலும் அமைக்கப்படுகின்றன.
13. தேசியத் தலைவர்கள் மரணமடையும் சமயத்தில் தேசியக் கொடியானது அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. அப்படிப் பறக்கவிடும் முடிவையும், கால அளவையும் முடிவு செய்யும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
14. தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதற்குமுன் அதை முழுமையாகக் கம்பத்தில் ஏற்றி, பின்னர் மெதுவாகக் கீழே இறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும். அப்படி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிகள் மனிதர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
15. தேசியக் கொடிகள் நிரந்தரமாக ஒன்பது அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதன் அகல நீளங்கள், 2:3 என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
16. இந்திய தரைப்படையில் முழுக்க முழுக்க கதரால் செய்யப்பட்ட தேசியக் கொடியையும், இந்திய விமானப் படையில் கதர்ப் பட்டால் செய்யப்பட்ட தேசியக் கொடியையும் பயன்படுத்துகிறார்கள். கடல் காற்றில் உள்ள உப்புத் தன்மை இவ்விரு வகைத் துணிகளையும் எளிதில் சேதப்படுத்திவிடும் என்பதால், இந்தியக் கடற்படையில் கம்பளி கொண்டு செறிவூட்டப்பட்ட கதர்த்துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள்.
17. வண்ணம் மங்கிய தேசியக் கொடிகள், பழுதடைந்த தேசியக் கொடிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் மேசை விரிப்பாகவோ, படுக்கை விரிப்பாகவோ தேசியக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது.
தேசியச் சின்னங்களை மதிப்போம்! அவற்றைக் காப்போம்!