Onetamil News Logo

 மாணவர்களை அலற விடும் அண்ணா பல்கலைகழகம் ;பணத்தை வாங்குவதிலே இவ்வளவு குளருபடி என்றால் :ஐயோ.? இப்பவே கண்ணக்கட்டுதே? 

Onetamil News
 

மாணவர்களை அலற விடும் அண்ணா பல்கலைகழகம் ;பணத்தை வாங்குவதிலே இவ்வளவு குளறுபடி  என்றால் -ஐயோ.? இப்பவே கண்ணக்கட்டுதே? 


நெல்லை, 2019 செப். 10: MBA. முதலாம்  ஆண்டு  மாணவர்கள் காலடி எடுத்து வைக்க போகும் போதே அல்லாட விடும். அண்ணா பல்கலைகழகம்.வரும் 12. 9.2019 அன்று ஆரம்பம் ஆகிறது. 
இன்று  (10.9.2019) மாலை 4.30 மணி வரை  மாணவர் சேர்க்கை கட்டணம் ஆன் லைனில் செலுத்த முடியால் தவிக்கிறார்கள்,  திருநெல்வேலியில் பயில போகும் மாணவர்கள். அலுவலகத்தில் நேரடியாக சென்று கேட்டால் உங்களுக்கு ஆன்லைனில் தான் (ஆப்பு வைச்சிருக்கோம்) அங்க போய்தான் பணத்த கட்டமுடியும்  என்று  எங்களை பார்த்து பரிதாபமாக கூறுகிறார்கள் 04622554255 :போன்மூலம்  தொடர்பு கொண்டால்  ஆன்லைன் இன்னும் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று பதில் தருகிறார்கள், இல்லையென்றால் இந்ந போனை தொடர்பு கொள்ளுங்கள் என்று 04622551298.எண்ணை தொடர்பு  கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்  அந்த எண்ணை தொடர்பு கொண்டால்., சார் நீங்க மாதம் போடுற இடத்தில்  நாளையும் (தினம்) நாளை போடுற இடத்தில்  மாதத்தையும் போடுங்க. ஓப்பனாயிரும்.  அப்படி ஓப்பனாயிட்டால் அந்த பாரத்துல இருக்கிற போன் எண்ணுல போன் பண்ணி கேட்டுட்டு பணத்த கட்டுங்க என்று அறிவுறை கூற :அப்படியே அந்த முயற்ச்சி செய்து பாரத்தால் அதுவும் தோல்வி -  மாணவர்களின்  சேர்க்கை பணத்தை வாங்குவதிலே இவ்வளவு குளறுபடி   என்றால் :ஐயோ.? இப்பவே கண்ணக்கட்டுதே? 
மாணவர்களை சுற்றி,சுற்றி விடாமல் மாணவர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டு, அவர்களுக்கு உதவ கருணை உள்ளம் கொண்ட அதிகாரிகள் முன் வருவார்களா?  (மாணவர்களால் தான்  :நமக்கு அந்தஸ்து, மரியாதை இருக்கிறெதென்பதையும் : மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கும்  ஏற்றும் அண்ணா பல்கலை கழகம் தான் என்பதையும் உணர்ந்து உதவி செய்யுங்கள்...

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo