Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநர் பயிற்சி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநர் பயிற்சி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 19 ; தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநர் பயிற்சி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும்  8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு திருநெல்வேலி பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக திருநெல்வேலி மண்டல அளவிலான(தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சேர்ந்தது) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கின்றது. 
ஐ.டி.ஐ. முடித்தவர்கள், 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்; இம்முகாமில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்களாவர்.

 மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 2500- க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பங்கேற்று தேர்வு பெறுபவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். இச்சான்றானது ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட  தேசிய தொழிற்பழகுநர் சான்று பெற்றவர்கள் கூடுதல் முழுத்திறமை பெற்றவர்களாக கருதப்படுவர். பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். மேலும் மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.7000/- வரை வழங்கப்படுகிறது.
எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட மாணவ மாணவியர் பயன் அடையுமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர் /மண்டல தொழிற் பழகுநர் ஆலோசகர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்(அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), தூத்துக்குடி அவர்களை 0461-2340041 என்ற எண்ணுக்கோ அல்லது 8778333588, 9443972101 என்ற எண்களுக்கோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo