Onetamil News Logo

மதுரை விமானநிலையத்தில் வாக்குவாதம் செய்தவருக்கு கொரோனா  ? உண்மை என்ன ? 

Onetamil News
 

மதுரை விமானநிலையத்தில் வாக்குவாதம் செய்தவருக்கு கொரோனா? உண்மை என்ன ? 


நெல்லை 2020 மார்ச் 23 ; நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் ( வயது 43 ) தகப்பனார் பெயர் ராமசாமி கவுண்டர் சமூகரெங்கபுரம். ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் ( நலன் கருதி அவர்கள் பெயர் பதிவு செய்யவில்லை ) உள்ளனர். இவர் 10 வருடங்களுக்கு முன்பே நெல்லையில் No.12,   கனரா வங்கி காலனி , முதல் தெரு , பிள்ளையார் கோவில் எதிர் , பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். 
துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையத்திற்கு கடந்த 17.03.20 அன்று  வந்து உள்ளார். இவருடன் 144 பேர் வந்துள்ளனர். வந்தவர்கள் அனைவரும் விமானநிலையத்தில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்து அங்கிருந்து கிளம்பி விட்டனர். அதில் வந்த ஒரு நண்பர் ஒருவருடன் மகாராஜன் காரில் நெல்லை தச்சநல்லுருக்கு வந்துள்ளார். அங்கிருந்து பேருந்து மூலம் வண்ணாரபேட்டை வந்துள்ளார். அங்குள்ள ஆரியாஸ் ஹோட்டலில் அறை எண் 3010 யில் தங்கி உள்ளார். மறுநாள் காலை 18.03.20 அன்று கள்ளிகுளத்தில் உள்ள G.M.மருத்துவமனை மருத்துவர் ஆனந்திடம் தனக்கு உடலில் உள்ள அறிகுறிகள் குறித்து கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் ஆனந்த் நீ வெளிநாட்டில் இருந்து வந்துள்ளாய் ஆகவே உடனே திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்யில் போய் அட்மிட் ஆகி செக் பண்ணு என்று கூறியுள்ளார். ஆனால் மகாராஜன் மருத்துவமனை செல்லாமல் நெல்லையில் தனியாக வீடு எடுத்து தங்க முடிவு செய்து புரோக்கர் மூலம் வீடு தேடி உள்ளார். அந்த நாட்களில் ஹோட்டலில் மஞ்சள் போட்டு குளித்தும் , வேப்பிலையையும் வைத்துள்ளார். 4 நாட்களாக வீடு தேடியும் வீடு கிடைக்கவில்லை என்பதால் 21.03.20 அன்று ஹோட்டலில் இருந்து  12.30 மணிக்கு ரூமை காலி செய்து விட்டு கிளம்பி விட்டார். மதியம் 5 மணிக்கு மனைவிக்கு போன் செய்து தான் வெளிநாட்டில் இருந்து வந்ததை கூறியுள்ளார். மேலும் நான் மருத்துவமனைக்கு செக்கப் பண்ண போறேன் எனது பைக்கையும் , ஒரு போர்வையையும் வெளியே எடுத்து வைத்து விட்டு சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படியே அவரது மனைவி செய்துள்ளார். மகாராஜனும் வீட்டின் முன்பு நின்ற பைக்கை எடுத்து கொண்டு திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்க்கு சென்றுள்ளார். அங்கு போய் விபரத்தை கூறியுள்ளார் 7மணிக்கு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo