Onetamil News Logo

தூத்துக்குடியில் தமுஎச  மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா   

Onetamil News
 

தூத்துக்குடியில் தமுஎச  மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா   


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11 ஆம் தேதி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. இவ்விழாவில் முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான சின்ன பாரதி அறக்கட்டளை விருது மற்றும் தொகை ரூ.1 லட்சம் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, சிறந்த தொண்மைசார் நூல், சிறந்த நாவல், சிறந்த விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்பு, சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல், சிறந்த கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு, மொழிபெயர்ப்பு, மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல், குழந்தைகள் இலக்கிய நூல், ஆவணப்படம், நாட்டுப்புற கலைச்சுடர், குறும்படம், இசை சுடர், நாடகச்சுடர், பெண் படைப்பாளுமை உள்ளிட்ட 16 விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து அன்றைய தினம் கலை மாலை நடைபெறுகிறது.
    இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து வரவேற்பு குழு கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் கு.ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது. இதில் தமுஎகச மாவட்ட செயலாளர் பே.சங்கரலிங்கம் வரவேற்புரையாற்றினார். இதில் தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் எஸ். ராமலிங்கம், மாநில துணைப் பொது செயலாளர் வெண்புறா, மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி காந்தன், மாநிலக்குழு உறுப்பினர் உதய சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
       கலை, இலக்கிய விருது வழங்கும் விழாவிற்கு வரவேற்புக்குழு தலைவராக வ.உ.சி கல்லூரியின் முதல்வர் டாக்டர் சொ.வீரபாகு அவர்களும், துணைத் தலைவராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் அவர்களும், வரவேற்புக்குழு செயலாளராக ம.சுப்பிரமணியன், துணைச் செயலாளராக தீக்கதிர் விக்னேஷ்வரன், பொருளாளராக மருத்துவர் பி.சிவனாகரன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo