Onetamil News Logo

நெல்லுார், ஆந்திராவில் பிறந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து இன்று முதலாமாண்டு நினைவு தினம்

Onetamil News
 

நெல்லுார், ஆந்திராவில் பிறந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து இன்று முதலாமாண்டு நினைவு தினம்


சென்னை 2021 செப் 25: திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது..
சங்கீதம் கற்காமல் கேள்வி ஞானத்தை வைத்தே பாடல்கள் பாடி அசத்திய எஸ்.பி.பி.அவர்கள்.                                        
        ஆந்திர  மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் எஸ்.பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகனாக  பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இவரது இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். இவருடைய தந்தை ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார். 
சங்கீதம் கற்காமல் கேள்வி ஞானத்தை வைத்தே பாடல்கள் பாடி அசத்திய எஸ்.பி.பி. 
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் எஸ்.பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகனாக  பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
           இவரது இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். இவருடைய தந்தை ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூரில் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். 
டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பதுதான். ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 
1964-ம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முதல் பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர்.
இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி. சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பி.க்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும். 
பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ்.பி.பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.
எஸ்.பி.பி.க்கு முதல் அரங்கேற்ற படம் எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார்.
அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966-ல் நகரே அதே ஸ்வர்க என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார்.
இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969-ம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை
எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் 1979-ல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ்.பி.பிக்கு பெரியப்பா மகன் ஆவார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.பி.பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார்.
இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம். இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பிலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். 
2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பு பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.
இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.  பாலசுப்பிரமணியம் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார்.  இதற்காக 2015-ம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்.  
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். 
இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார். உடல் நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று செப்டம்பர் 25-ல் காலமானார். 
 1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார். இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக அமைந்தது.
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.துடிக்கும் கரங்கள், மயூரி, சிகரம், தையல்காரன், ஊர்பஞ்சாயத்து, உன்னைச் சரணடைந்தேன் உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தார்.
நிலவை மையமாக வைத்து பாடிய பாடல்கள், 'சூப்பர் ஹிட்' ஆனது. 'ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா...' போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.
சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார்.* கமல், ரஜினி, விஜயகாந்த் என, அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர்.* கேளடி கண்மணியில் 'மண்ணில் இந்தக் காதல்...' அமர்க்களம் படத்தில், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo