Onetamil News Logo

தூத்துக்குடி அருள்ராஜ்  மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்  நோயாளி இன்று பலி ; போலீஸ் குவிப்பு  ;வழக்குப்பதிவு செய்யப்படுமா? உறவினர்கள் எதிர்பார்ப்பு  

Onetamil News
 

தூத்துக்குடி அருள்ராஜ்  மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்  நோயாளி இன்று பலி ; போலீஸ் குவிப்பு  ;வழக்குப்பதிவு செய்யப்படுமா? உறவினர்கள் எதிர்பார்ப்பு  


                                                                                                                                             
தூத்துக்குடி ஜூன் 9 ;தூத்துக்குடி அருள்ராஜ்  மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்  நோயாளி பலியானதால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகை செய்துள்ளனர்.இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து 
வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து இவரது மனைவி ப்ரீட்டா (31), இவருக்கு நெஞ்சு வலிக்கிறது என்று நேற்று இரவு 9 மணிக்கு 3 ம் கேட் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 இது குறித்து ப்ரீட்டா கணவர் முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது....எனது மனைவியை இரவு 9 மணிக்கு ஆட்டோவில் வந்து நடந்து தான் மருத்துவமனையில் சேர்த்தேன் ஆனால் நான் சேர்த்து பொழுது மருத்துவர்கள் இல்லை என்று செவிலியர்கள் தான் மருத்துவம் பார்த்தார்கள்.ஆனால் என் மனைவிக்கு இசிஜி ,எக்ஸ்ரே,இரத்தப்பரிசோதனை போன்றவை  எடுக்கப்பட்டுள்ளது. இவர் நன்றாக பேசிக்  கொண்டு இருந்தார். மருத்துவமனை நிர்வாகத்தினார் தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க ரூபாய் 10ஆயிரம் முன்பணமாக கேட்டதாகவும் அதற்கு அவர் இரவு நேரமாகிவிட்டதால் காலையில் வந்து பணத்தை கட்டுவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ப்ரீட்டாவுக்கு மேற்க்கொண்டு முறையான எந்த சிகிச்சையும் அளிக்காமால், டாக்டர் யாரும் வந்து பார்க்காமால் பயிற்சி டாக்டர்களை வைத்து மட்டும் சிகிச்சை அளித்ததால் தனது மனைவி இறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர் ரூபாய் 2500க்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்தாக கூறிய அவர் இன்று காலை வயிறு பசிக்கிறது என்று சொல்லி பால் வாங்கி தர சொன்னர்கள்.உடனே பால் வாங்கி வழங்கினேன், கொஞ்ச நேரம் கழித்து நர்ஸ் 8.30 க்கு இறந்து விட்டதாக சொன்னார்கள்.என்று நம்மிடையே கூறினார்.                                                                                       இறந்து போன ப்ரீட்டாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவரது கணவர் வாடகை வேன் ஓட்டுநராக பணி செய்கிறார்.  அங்கு அவருக்கு முறையான சிகிச்கை அளிக்காதால் பலியானதாக அவரது கணவர் புகார் தெரிவித்தார். இதுகுறித்து அவரது கணவர் முத்து கூறுகையில் எனது மனைவி இறந்த பின்பும் அவர் உயிரோடு உள்ளதாக கூறி மருத்து வாங்கி வரச்சொன்னதாக கூறினார். இதைத்தொடர்ந்து ப்ரீட்டா உறிவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo