தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் பங்கேற்பு
தூத்துக்குடி 2022 ஆகஸ்ட் 1 ; தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில்,நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (01.08.2022) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவித்தொகை,முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், வரன் முறைபட்டா 3 பேருக்கும்,ஆதரவற்றோர் விதவை சான்றிதழ் ஒரு நபருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில்,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன்,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சரவணன், மாவட்டவருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான்,மகளிர் திட்ட இயக்குநர் மரு.வீரபத்திரன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா,சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.