தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்திட திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி கலெக்டர் யிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
தூத்துக்குடி ஜனவரி 11 ;தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி தூத்துக்குடி மாநகர மக்கள்தொகை 3,72,408 ஆகும். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 50 வார்டுகளுக்கு தாமிரபரணி ஆற்றில் உள்ள வல்லநாடு படுகையிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியோடு இணைந்துள்ள அத்திமரப்பட்டி, தூத்துக்குடி ஊரகம், சங்கரப்பேரி, மீளவிட்டான் மற்றும் முத்தையாபுரம் ஆகிய முன்னாள் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று தண்ணீர் தட்டு பாட்டால் தூத்துக்குடி மிகவும் வஞ்சிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இது குறித்து தூத்துக்குடி
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி கூறியதாவது... தூத்துக்குடி மாநகர மக்களின் குடி நீர் தேவையை நிறைவேற்ற 1 ,2 ,3 ,பைப் லைன் திட்டம் மூலம் குடி நீர் தூத்துக்குடிக்கு வந்தது. அதிமுகவினரின் நிர்வாக சீர் கேட்டால் இன்று 20 நாளுக்கு ஒரு முறை குடி நீர் வழங்கும் நிலைமை உருவாகி உள்ளது. கோடை காலத்தில் குடி நீர் குடிப்பதற்கே கிடைக்குமா? இனி மழையை நம்பி இருக்க முடியாது. குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்க சென்னை போன்ற பெரிய நகரங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் டெபாசிட் செய்த்துள்ள பணம் 100 கோடி ரூபாய் உள்ளது.இப்பொழுது அந்த பணம் 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதை கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வேண்டும் .போர்க்கால அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கிட வேண்டும் என்றார்.