தூத்துக்குடி -மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு அதிக அளவு சிறுநீரக பாதிப்பு ; சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை
தூத்துக்குடி -மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு அதிக அளவு சிறுநீரக பாதிப்பு ; சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை
தூத்துக்குடி 2023 செப் 25 ; தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு அதிக அளவு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு செய்ய மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் ரா.சரவணக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறார். அவர் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது ;தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் மற்றும் 15 சுனாமி குக்கிராமங்கள் உள்ளன. இந்த குக்கிராமங்களில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி பகுதிகளில் சில ஆண்டுகளாகவே சிறுநீரக கோளாறு காரணமாக அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுநீரக பாதிப்பு காரணமாக அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றது. இது குறித்து சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும்படி கடந்த 15 /8 /2023 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆகையால் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகின்ற காரணத்தினை கண்டறியும் பொருட்டு மருத்துவத்துறையின் அனைத்து துறையும் சார்ந்த நிபுணர்களுடன் கூடிய சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.