Onetamil News Logo

கோலம் போட்டு கொண்டிருந்த இளம்பெண்  கொலையில் நடந்தது என்ன?

 
Onetamil News
Onetamil News
 
 

கோலம் போட்டு கொண்டிருந்த இளம்பெண்  கொலையில் நடந்தது என்ன?


தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள  முத்துகிருஷ்ணாபுரம் 2–வது தெருவை சேர்ந்த கறிக்கடைகாரர்  மாயாண்டி (வயது 39).  இவருடைய மனைவி செண்பகவள்ளி (36). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களது எதிர்வீட்டில் கணேசன் மகன் அம்பிகாபதி (40) பெற்றோருடன் வசித்து வருகிறார். பிளம்பரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.  நேற்று காலை 5.30 மணிக்கு செண்பகவள்ளி வழக்கம் போல் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அம்பிகாபதி உருட்டு கட்டையால் செண்பகவள்ளி தலையில் சரமாரியாக அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் செண்பகவள்ளி அலறியவாறு வீட்டு வாசலில் விழுந்து கதறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மாயாண்டி, ரத்த வெள்ளத்தில் மனைவி துடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செண்பகவள்ளியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செண்பகவள்ளி பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடலை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.                                                                                                                                               இந்த படுகொலை குறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளம்பர் அம்பிகாபதியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:– கடந்த தீபாவளி பண்டிகையின் போது, செண்பகவள்ளியின் குழந்தைகள் வீடு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது வெடிச்சத்தத்தை பிடிக்காததால் நான் அந்த குழந்தைகளை கண்டித்தேன். இதை பார்த்த செண்பகவள்ளி என்னுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அன்றைய தினம் பிரச்சினை முடிந்தது. இதை அறிந்த செண்பகவள்ளியின் கணவர் மாயாண்டி என்னை கண்டித்தார். அவருடனும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இந்த பிரச்சினையில் எங்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் எனக்கும், மாயாண்டிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி என்னை அடித்து உதைத்து விட்டார். இது எனக்கு பெரிய அவமானமாக போய்விட்டது. இதனால், மாயாண்டியையும், அவருடைய மனைவியையும் மீண்டும் தாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.
 அதிகாலையில் மது போதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது, தன்னுடைய வீட்டின் முன்பு செண்பகவள்ளி கோலம் போட்டு கொண்டு இருந்துள்ளார். அவரை பார்த்தவுடன் கோபம் வந்தது. அவரை அடித்து உதைக்க வேண்டும் என்று ஆத்திரம் ஏற்பட்டது. அப்போது, அருகில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து கொண்டு சென்றேன். நான் செல்வதை பார்க்காமல் செண்பகவள்ளி கோலம் போடுவதில் கவனமாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நான், திடீரென உருட்டு கட்டையால் அவருடைய தலையில் சரமாரியாக அடித்தேன். அவர் அலறியவாறு வீட்டு வாசலில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்து நான் தப்பி சென்று விட்டேன். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தேன், என அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo