தூத்துக்குடி ஆசிரியர் காலனி பி. அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து அமைச்சரிடம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, பொன்னப்பன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.