தூத்துக்குடியில் டூட்டி பியூட்டி ஒரு மாதம் ஒரு வார்டு சேவை திட்டத்திற்காக இன்று கிருஷ்ணராஜ புரம் 10 வது வார்டு பகுதியில் சமுகப்பணிகள் சேவை ; ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் ஏற்பாடு
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 21 ;டூட்டி பியூட்டி ; தூய்மையை நோக்கி தூத்துக்குடி ஹோப் அமைப்பு சார்பில் ஒரு மாதம் ஒரு வார்டு சேவை திட்டத்திற்காக இன்று கிருஷ்ணராஜ புரம் 10 வது வார்டு பகுதியில் சமுகப்பணிகள் சேவை நடந்தது ;ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்விற்கு வி கேன் டிரஸ்ட் நிறுவன தலைவர் பேராசிரியர் சீனிவாசன்,தலைமை தாங்கினார்.நிறுவன உறுப்பினர் கிரிஸ்டோபர், நிறுவன பொருளாளர் ஏஞ்சலின் கோயில்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ், தெற்கு மண்டலம் ராஜபாண்டி, கிழக்கு மண்டலம் ராஜசேகர் ,வக்கீல் சின்னத்தம்பி,சமூக ஆர்வலர் துரை பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த குழுவினர் அந்தப் பகுதியில் தரம் பிரித்து குப்பைகளை பொதுமக்களிடம் பெற்றுச் சென்றனர் சாலைகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றினர். மேடு பள்ளங்களை சரி செய்தனர். சுகாதாரத்தைப் பற்றி அவர்கள் விளக்கிப் பேசினார்கள். சுத்தம்.சுகாதாரம் ஒரு மனிதனுக்குத் தேவை என்பதை உணர்த்தினார்கள். மரக்கன்றுகளை நட்டு வைத்து அந்தப் பகுதியைச் சார்ந்த முக்கிய நபர்களை அழைத்து அவர்களை பாதுகாத்து தண்ணீர் ஊற்றி வளர்க்க அறிவுறுத்தினார்கள்.இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஹோப் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் செய்திருந்தார்
வாழ தகுதியுள்ள நகரமாக மாற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர். ட்ரீம் ஹோம் ஒரு மாதம் ஒரு வார்டு சேவை திட்டத்திற்காக இன்று கிருஷ்ணராஜ புரம் 10 வது வார்டு பகுதியில் 18 மரக்கன்றுகள் நடப்பட்டன. டிஎம்எல் சார்பில் தளவாடங்களால் வழங்கப்பட்டது. சுவர் ஓவியம், துப்புரவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உறுப்பினர்கள், கார்ப்பரேஷன் ஊழியர்கள், நல்ல மனிதன் தல ரசிகர்கள் மணிமாறன் , சகா கலைக்குழு சார்பில் முனைவர் சகா சங்கர் தலைமையில் கிராமிய நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி சேவியர்ஸ் கல்லூரி தூய்மை பாரத இயக்கம் பற்றி ஆராய்ச்சி மாணவிகளும் கலத்து கொண்டனர்.நிகழ்வு முடிந்த பின் அனைவருக்கும் சுண்டல் மற்றும் பால் இல்லாத கருப்பட்டி காபி கொடுத்தனர்.