Onetamil News Logo

டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் கொலையாளி எட்டயபுரத்தில் கைது, பரபரப்பு தகவல்கள் ஆவதும் பெண்ணாலே,மனிதன் அழிவதும் பெண்ணாலே என்றாயிற்று 

Onetamil News
 

டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் கொலையாளி எட்டயபுரத்தில் கைது, பரபரப்பு தகவல்கள் ஆவதும் பெண்ணாலே,மனிதன் அழிவதும் பெண்ணாலே என்றாயிற்று 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி என்கின்ற பெண்ணுக்கும் ஆனந்தராஜ் -க்கும்,ஏற்கனவே நட்பு ஏற்பட்டு காதலாக மாறி திருச்செந்தூர் கோவிலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர்,திருமணம் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஆனந்தராஜ் அவரது வீட்டிலும் மகாலட்சுமி அவரது வீட்டிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் எப்பொழுதாவது வெளியே இரண்டு பேரும், இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது.                                              இந்த நிலையில் ஏற்கனவே 2 வது திருமணம் செய்து அடுத்த திருமணத்திற்கு தயாராக இருந்த புதூர் குமாரகிரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் வயது 31,என்பவர் படர்ந்தபுளி மகாலட்சுமி மீது காதல் கொண்டு இரண்டு பேரும் திருமணம் செய்து கடந்த 2 மாதமாக தனி வீடு பிடித்து,குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சூரிய ராகவன் ஆனந்தராஜ் மீது எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து மிகவும் தொந்தரவு செய்ததாகவும், மிரட்டல் விடுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் சூரியராகவனுக்கு ,சாதகமாக பிரச்சனையை முடித்துள்ளனர். அப்பொழுது ஆனந்தராஜ் மிகவும் அவமானம் பட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் அவமானத்தை தாங்க முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு கடந்த 2 மாதத்தில் எட்டய புரத்தில் உள்ள டிவி மெக்கானிக் கடைக்கு மகாலட்சுமியின் முதல் கணவர் ஆனந்தராஜ் அடிக்கடி வந்து பாசத்தைப் பொழிந்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் இன்று ஆனந்தராஜ் டி .வி.மெக்கானிக் கடைக்கு வந்து இருக்கிறார். அப்பொழுது மிளகாய்ப் பொடியும் ,ஆடு அறுக்கிற கத்தி போன்றவற்றை கையில் வைத்திருந்திருக்கிறார். வந்தவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மிளகாய்பொடியை அவரது கண்ணில் தூவி விட்டு அதன் பின்னர் கொலை செய்திருக்கிறார். இந்த நிலையில்  எட்டையபுரம் காவல் நிலையத்தில் கொலை செய்த ஆனந்தராஜை வழக்கறிஞர் ஒப்படைத்திருக்கிறார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo