Onetamil News Logo

சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது

Onetamil News
 

சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது


தூத்துக்குடி 2021 செப் 16 ;தூத்துக்குடி மாவட்டம்,தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது. 
அதன்படி  விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (16.09.2021) தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைகுளம் நூர் காலனி பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு   சந்தேகத்திற்கிடமாக வந்த TN 72 E 5767 என்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 30  கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார்  மேற்படி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் ஆனந்த் (25) மற்றும் தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ரமேஷ் (26) ஆகிய இருவரையும் கைது செய்து,  மேற்படி வாகனத்தையும், 40 ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து   தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo