Onetamil News Logo

ஒரே பெண்ணை இரண்டு பேர் போட்டி போட்டு காதல்,டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூரமாக கொலை, எட்டயபுரத்தில் பரபரப்பு 

Onetamil News
 

ஒரே பெண்ணை இரண்டு பேர் போட்டி போட்டு காதல்,டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூரமாக கொலை, எட்டயபுரத்தில் பரபரப்பு 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20;ஒரே பெண்ணை இரண்டு பேர் போட்டி போட்டு காதல்,டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூரமாக கொலை,எட்டயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம், புதூர் குமாரகிரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் இவரது மகன் சூரிய ராகவன் (31). இவர் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையின் முன் நின்று கொண்டிருந்த அவரை மர்ம நபர் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.               இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.                                                                    
                இதில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சூரிய ராகவனும் சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் என்பவரும்  ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரத்தில் கொலை நடத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo