Onetamil News Logo

வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவர் கைது

Onetamil News
 

வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவர் கைது


தூத்துக்குடி 2021 நவம்பர் 24 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் இன்று (24.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி தியேட்டர் ரோடு to கதிரேசன் கோவில் ரோடு சந்திப்பு பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்களான முத்துப்பாண்டி மகன் சின்னராஜ் (34) மற்றும் காளிதாஸ் மகன் கார்த்திக் (19) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் சின்னராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சின்னராஜ் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில்  கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட மொத்தம் 27 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo